ADDED : ஏப் 10, 2025 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லையடுத்த தாமரைப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நுாற்றாண்டு விழா நடந்தது.
திண்டுக்கல் புறநகர் வட்டார கல்வி அலுவலர்கள் முருகேசன் ஜெபசுதா முன்னிலை வகித்தனர். சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி பெருமாள்வேல் முருகன் நுாற்றாண்டு நினைவு நுழைவு வாயில், நினைவு கல்வெட்டை திறந்து வைத்தார். தலைமையாசிரியர் புவனேஸ்வரி வரவேற்றார். ஆசிரியை உமாதேதி அறிக்கை வாசித்தார். ஆசிரியர் ராஜேந்திரபிரசாத் திலகவதி பேசினார். ஊர் முக்கியஸ்தர்கள் ஜெயராஜ், பெரியமுருகன், பாலமுருகன், விக்னேஷ்குமார், தன்னாசி கலந்து கொண்டனர். ஆசிரியை சுதா நன்றி கூறினார்.

