தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவன்

 கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவன்

 கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவன்


ADDED : மார் 09, 2026 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 06:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆயக்குடி: பழநி ஆயக்குடி அருகே கிணற்றில் குளிக்க நண்பர்களுடன் சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கினார்.

பழநி அருகே புஷ்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் கணியூரை சேர்ந்த பிரபாகரன் மகன் தமிழ் 15, படித்து வந்தார்.

இவர் அதே பள்ளி மாணவன், ஆயக்குடி ஓபளாபுரத்தை சேர்ந்த நண்பர்களுடன் ஆயக்குடி அருகே சுண்ணாம்பு பாறை பகுதியில் தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றார்.

அப்போது தமிழ் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார். உடலை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பழநி ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us