ADDED : செப் 18, 2026 09:04 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், செப்.19 -
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டின் துவக்கத்தில் மூன்று நாட்களுக்கு பின் பள்ளிகள் துவக்கப்பட்டன. மொத்த வேலை நாட்களான 210 நாட்களில் 207 நாட்கள் மட்டுமே மீதம் உள்ள நிலையில், அதற்கு ஈடாக செப்.,19, டிச.,19, ஏப்.,24 ஆகிய மூன்று சனிக்கிழமைகளை வேலை நாட்களாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
அதன்படி மாவட்டத்தில் இன்று (செப்.,19) அனைத்து வகை பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
