ADDED : பிப் 29, 2024 07:33 AM
திண்டுக்கல் : ஸ்ரீ காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா டேலண்சியா2024 என்ற பெயரில் நடந்தது. பள்ளி செயலாளர் ராமலிங்கம் , நிர்வாகிகள் அமுதா,.நரசிங்க சக்தி, ஜோதிலட்சுமி, முருகன், முதல்வர் லதா தலைமை வகித்தனர். ஜி.டி.என்., கல்லுாரி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பிரீகேஜி முதல் அனைத்து மாணவர்களும் தங்களுடைய படைப்புகளை தமிழ், ஆங்கிலம், அறிவியல் சார்பாக காட்சிப்படுத்திருந்தனர். பெற்றோர்கள் கலந்து கொண்ட இதில் சிறந்த படைப்புகளுக்கு செயலாளர் பரிசளித்தார். ஏற்பாட்டினை அகிலன், பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
திண்டுக்கல் : திண்டுக்கல் நாகல்நகர் சவுராஷ்டிரா சபைக்கு பாத்தியப்பட்ட மெங்கில்ஸ் ரோட்டில் உள்ள சவுராஷ்டிரா ஆரம்ப பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. தாளாளர் ஷங்கர் வரவேற்றார். நாகல்நகர் சவுராஷ்டிரா சபை தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். எஸ்.வி.என்.பி., நர்சரி பள்ளி தாளாளர் மாதவன் முன்னிலை வகித்தார். அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் ஏசுநாதன் செய்திருந்தார்.
வடமதுரை :வடமதுரை கலைமகள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. தாளாளர் பெருமாள் தலைமை வகித்தார். செயல் இயக்குனர்கள் 2அருள்மணி, ஹரிஸ்செந்தில் முன்னிலை வகித்தனர். துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பாலரவிச்சந்திரன் வரவேற்றார். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

