அறிவியல் கண்காட்சி நிறைவு : சிறந்த படைப்புகளுக்கு பரிசு
அறிவியல் கண்காட்சி நிறைவு : சிறந்த படைப்புகளுக்கு பரிசு
ADDED : பிப் 04, 2026 06:13 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், நாகராஜன் அறிவியல் அறக்கட்டளை இணைந்து தனியார் பள்ளி மைதானத்தில் அறிவியல், புத்தாக்க கண்காட்சியை ஜன.28ல் துவங்கியது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேசினார்.
நுாற்றுக்கு மேற்பட்ட அரங்குகளில் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது.
அறிவியல், தொழில்நுட்ப சிந்தனை கருத்தரங்கு, புட்கோர்ட், இஸ்ரோ ராக்கெட் மாதிரிகள் இடம் பெற்றிருந்தன.
மாணவர்களின் சிறந்த படைப்புகள், இளம் விஞ்ஞானிகள்தேர்வு செய்யப்பட்டு பாராட்டு சான்றிதழ், ஊக்கத்தொகையினை அமைச்சர், கலெக்டர் வழங்கினர்.
பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார்,அறிவியல் அறக்கட்டளை நிறுவாகி மாறன் நாகராஜன், பேராசிரியர் மனோகரன் பங்கேற்றனர்.
