
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு மவுன்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
முதல்வர் ஆத்தியப்பன் வரவேற்றார். தாளாளர் லின்னி நோரிஸ் துவக்கி வைத்தார்.
வீடுகள், அடுக்கு மாடி வீடுகள், தொழிற்சாலை கழிவு நீரினை சுத்திகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்தும் முறை, கால்நடை கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் செயல்முறைகளை செய்து காட்டினர்.
கம்ப்யூட்டர், கணிதம் பாட புதிர்களுக்கு விடை அளித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைவர் நோரிஸ் நடராஜன் பரிசு வழங்கினார்.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஜாஸ்மின் சுமைலி, ஐஸ்வர்யா, காவியா செய்திருந்தனர்.

