ADDED : ஏப் 06, 2025 05:21 AM
அ நிறம் | அளவு
பழநி : பழநியாண்டவர் பாலிடெக்னிக் கல்லுாரியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. மாணவர்கள் சூரிய சக்தியில் இயங்கும் உப்பு நீரை குடிநீர் ஆக்கும் இயந்திரம், தானியங்கி வழிகாட்டும் தீயணைப்பு வாகனம், மின் வாகனங்களில் இயங்கும் பேட்டரியின் வெப்பத்தை கட்டுப்படுத்தும் கருவி உள்ளிடவற்றை காட்சிப்படுத்தினர்.
கல்லுாரி தாளாளர் வெங்கடேஷ், முதல்வர் கந்தசாமி, இயந்திரவியல் துறை தலைவர் ராஜன், அமைப்பியல் துறை தலைவர் ரமேஷ், கிறிஸ்டியன் பாலிடெக்னிக் முதல்வர் தினகரன், அறிவியல் துறை தலைவர் யமுனாராணி பங்கேற்றனர்.
