ADDED : ஆக 25, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
நெய்க்காரபட்டி, ஆக.26-
பழநி நெய்க்காரப்பட்டி ஸ்ரீ ராமச்சந்திரா இன்டர்நேஷனல் பள்ளியில் மதுரை மண்டல அளவில் மாவட்ட கல்வி அலுவலர்கள், செயலாளர்களுக்கான பாரத சாரண, சாரணியர் இயக்க கருத்தரங்கம் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் செல்வகுமார் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் பரிமளா, ஸ்ரீரேணுகாதேவி கல்வி குழுமங்கள் செயலர் கிரிநாத், இணைச்செயலர் பவிதா, பாரத சாரண, சாரணியர் இயக்க பழநி கல்வி மாவட்ட செயலர் மாசிலாமணி ஆகியோர் பங்கேற்றனர். சாரணர் இயக்க வளர்ச்சி எண்ணிக்கை 12 லட்சமாக உயர்த்துவது, பள்ளிகளில் குருளையர் பிரிவு, நீலப்பறவையர் பிரிவு, சாரணர் பிரிவு, திரி சாரணர் பிரிவு ஆகியவற்றை உருவாக்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
