/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஹிந்து முன்னணி வியாபாரிகள் நலச்சங்க செயலாளர் கைது
/
ஹிந்து முன்னணி வியாபாரிகள் நலச்சங்க செயலாளர் கைது
ADDED : ஏப் 16, 2025 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி:பிரியாணி கடை விவகாரம் குறித்து முகநுாலில் பதிவிட்ட திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த ஹிந்து முன்னணி வியாபாரிகள் நலச் சங்க மாநில செயலாளர் ஜெகன் கைது செய்யப்பட்டார்.
ஏப்.,4 ல் சென்னை ஓட்டலில் கெட்டுப்போன பிரியாணி விற்றதால் வாடிக்கையாளர்கள் பாதிப்பு அடைந்ததாக வீடியோ ஓன்றை ஜெகன் முகநுாலில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலானது.
மத மோதல் உருவாக்கும் வகையில் பேசுதல், வதந்தி பரப்புதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் பழநி டவுன் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதனடிப்படையில் நேற்று ஜெகனை போலீசார் கைது செய்தனர்.

