ADDED : மார் 26, 2026 06:03 AM

அ நிறம் | அளவு
கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் விதைப் பூண்டு தயார் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் ஏராளமான ஏக்கரில் மலைப் பூண்டு சாகுபடியாகிறது.
ஆண்டிற்கு இரு போகம் விளைச்சல் காண்கிறது. சில மாதங்களுக்கு முன் மருத்துவ குணம் நிறைந்த மலைப்பூண்டு நடவு செய்து தற்போது அறுவடை முடிந்துள்ளது. தற்போது இரண்டாம் கட்ட நடவுக்காக மேட்டுபாளையத்திலிருந்து விதைப் பூண்டு கொண்டு வரப்பட்டுள்ளது. இவற்றை தரம் பிரித்து நடவுக்கு ஏற்றாற் போல் பூண்டுகளை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விதைப் பூண்டு 1 கிலோ ரூ. 350 க்கு விவசாயிகள் கொள்முதல் செய்துள்ளனர். நடவு பணி ஏப்ரல் கடைசி வாரத்தில் துவங்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
