ADDED : செப் 01, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி, செப்.2
சின்னாளபட்டி சேரன் வித்யாலயா பள்ளி மாணவர்கள் மாவட்ட ஹேண்ட்பால் போட்டிகளில் வென்று மாநில போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் திண்டுக்கல் வருவாய் மாவட்ட அளவிலான சூப்பர் சீனியர் பிரிவு ஹேண்ட்பால் போட்டிகள் சின்னாளபட்டியில் நடந்தது. 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் சின்னாளபட்டி சேரன் வித்யாலயா பள்ளி அணி வென்று மாநில அளவில் பாரதியார் தின விளையாட்டு போட்டிக்கு தேர்வாகினர்.
இதேபோல் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் சின்னாளப்பட்டி அணி வென்று மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா முதல்வர் திலகம் தலைமையில் நடந்தது. தாளாளர் சிவக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார். பள்ளி மேலாளர் பாரதிராஜா முன்னிலை வகித்தார்.
