ADDED : பிப் 16, 2025 03:19 AM
வேடசந்துார் : விவசாயிகளுக்கு மத்திய மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள், திட்டங்கள் குறித்தும், அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை வழங்கும் வகையில் கருத்தரங்கம் நடந்தது. ஆத்துமேடு தனியார் ஓட்டலில் நடந்த கருத்தரங்கிற்கு வி.புதுக்கோட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் குப்புசாமி தலைமை வகித்தார்.
குடகனாறு பாதுகாப்பு சங்கத் தலைவர் ராமசாமி வரவேற்றார். தமிழக ஆறுகள் வளம் மீட்பு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் குருசாமி, இஸ்கான் அமைப்பின் நிர்வாகி ரஹீம் பேசினர்.
மாவட்ட விதை சான்றளிப்பு உதவி இயக்குனர் சின்னச்சாமி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ரமேஷ், முத்துவேல், ரவிச்சந்திரன், விவசாயிகள் டால்பின் ராமலிங்கம், காசிநாதன், சண்முகராஜ், ஆண்டவர், செல்வம், நடராஜன், குப்புசாமி, நாட்ராயன், துரைபாபு , செல்வராஜ் , மகளிர் அணி ரேவதி பங்கேற்றனர்.