ADDED : டிச 28, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை :  அய்யலுார் ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரியில் பி.காம்., சி.ஏ., துறை சார்பில்  புதிய நிறுவன சட்டம் 2013 பற்றிய கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் திருமாறன் தலைமை வகித்தார். துறைத் தலைவர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். மாணவி கிருத்திகா வரவேற்றார்.  மதுரை எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி பேராசிரியர் பி.ஸ்ரீராம் பேசினார். மாணவி திரிஷா நன்றி  கூறினார்.

