ADDED : ஜன 10, 2025 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், ஆர்.வி.எஸ்., பாலிடெக்னிக் கல்லுாரி இணைந்து குளத்துாரில் தொழில்துறை தேவைகளுக்கான அறிவியல், தொழில்நுட்ப திறனை உருவாக்குதல் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கமலகண்ணன் துவக்கி வைத்தார். கல்லுாரி சி.இ.ஓ.,வேணுகோபால்முருகதாஸ், இயக்குனர் மைதிலி முன்னிலை வகித்தனர்.
கம்ப்யூட்டர் துறைத்தலைவர் நவநீதகிருஷ்ணன் வரவேற்றார். அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் வின்சென்ட், அரசு கருவி பொறியியல் பயிலக முதல்வர் வரதகணேசன், பி.ஏ., பயிற்சி கன்சல்டண்சி இயக்குனர் பால்சுஷீல், கல்லுாரி முதல்வர் கதிர்வேல் பேசினர். டெக்ஸ்டைல்ஸ் துறை தலைவர் ஆகாசம்பிள்ளை நன்றி கூறினார்.

