ADDED : ஆக 21, 2026 04:42 PM
அ நிறம் | அளவு
வடமதுரை, ஆக.22-
அய்யலுார் ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரியில் பி.காம்., சி.ஏ., துறை சார்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் திருமாறன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மதுரை நாடார் மகாஜன சங்கம் எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி பேராசிரியர் ஸ்ரீராம் பேசினார். கருத்தரங்க ஏற்பாடுகளை துறைத்தலைவர் ஜீவானந்தம் செய்திருந்தார். பேராசிரியர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.
