ADDED : ஏப் 17, 2026 10:54 PM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி:காந்தி கிராம பல்கலை நிகர் நிலை பல்கலை அந்தஸ்து பெற்ற 50 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு மார்ச் 9 முதல் ஏப்.,17 வரை 'பல்கலையின் நினைவலைகள்' என்ற 50 இணைய வழி கருத்தரங்குகள் நடந்தன.
முன்னாள் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்.இதன் நிறைவு விழா துணைவேந்தர் பஞ்சநதம் தலைமையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் கணினி அறிவியல் புலத்தலைவர் கலாவதி, இணை பேராசிரியர்கள் சிவகுருநாதன், செந்தில்குமரன் கவுரவிக்கப்பட்டனர்.
--
