தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தொகுதி வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள்; செந்தில்குமார் பிரசாரம்

 தொகுதி வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள்; செந்தில்குமார் பிரசாரம்

 தொகுதி வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள்; செந்தில்குமார் பிரசாரம்


ADDED : ஏப் 13, 2026 02:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 02:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: ''திண்டுக்கல் தொகுதிக்கு புதிய வளர்ச்சி திட்டங்கள் உருவாக்கப்படும்'' என தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் பிரசாரம் செய்தார்.

திண்டுக்கல் தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய மல்லனம்பட்டி, பாப்பனம்பட்டி, கோட்டூர், ஆவரம்பட்டி சுற்றுப்பகுதிகளில் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார். அவருக்கு பெண்கள் ஆரத்தி, பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.

அவர் பேசியதாவது:

இம்முறை உங்களுக்காக உழைக்க திண்டுக்கல்லில் எனக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறார் முதல்வர். பத்தாண்டுகள் எம்.எல்.ஏ.,வாக, ஐந்தாண்டுகள் அமைச்சராக இருந்த சீனிவாசன் இத்தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு 13 நாட்களாக பிரசாரம் செய்கிறேன். 85 சதவீத கிராமங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பருவ மழை பொய்த்து போன நிலையில் நிறைய அடிப்படை வசதிகள் இத்தொகுதியில் நிறைவேற்றி தர வேண்டி உள்ளது.

திண்டுக்கல்லுக்கு வந்த 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை அ.தி.மு.க., அமைச்சராக இருந்த சீனிவாசன் தவறவிட்டார். இத்தொகுதிக்கு பெரிய வளர்ச்சி திட்டங்கள் உருவாக்க வேண்டும். உங்கள் பிரதிநிதியாக சட்டசபையில் பேச வேண்டும். உட்கட்டமைப்பு வசதிகள், பாலங்கள், சாக்கடை வசதியை ஒழுங்குப்படுத்த வேண்டும். அதற்கு உங்களோடு பணியாற்ற எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

அப்போது மாவட்ட துணைச்செயலாளர் பிலால் உசேன், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, பொருளாளர் மீடியா சரவணன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us