நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்தூரில், ஒன்றிய மார்க்சிஸ்ட் சார்பில், நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு, செந்தொண்டர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம், நடந்தது.
ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் பாலச்சந்திர போஸ், ஒன்றிய செயலாளர்கள் ஜெயபால், மலைச்சாமி முன்னிலை வகித்தனர். செந்தொண்டர் கன்வினர் பாலாஜி வரவேற்றார். ஒன்றிய அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணி, பஸ் ஸ்டாண்ட் வழியாக ஆத்து மேடு சென்றடைந்தது. அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராமலிங்கம், சாமுவேல்ராஜ், எம்.பி. சச்சிதானந்தம் பேசினர். மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாநில குழு உறுப்பினர் ராணி பங்கேற்றனர்.

