UPDATED : அக் 30, 2026 07:56 PM
ADDED : அக் 30, 2026 07:54 PM

வடமதுரை: அய்யலுார் அரசு மேல்நிலைப்பள்ளிக்காக மேலாண்மைக் குழு சார்பில் தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
அய்யலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மரம் நடுவிழா, புதிய பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் அறிமுக விழா நடந்தது. தலைமை ஆசிரியர் வாலகுரு தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கிருத்திகா, துணைத்தலைவர் வசந்தி முன்னிலை வகித்தனர்.
மேலாண்மைக் குழு சார்பில் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன், வருகைப் பதிவு, நன்னடத்தை அடங்கிய தகவல் தொடர்பினை பெற்றோரிடம் எளிதாக சேர்த்திடும் வகையில் ‘ஜி.எச்.எஸ்.எஸ்., அய்யலுார்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இச்செயலி பள்ளியில் பதிவு செய்யப்பட்ட பெற்றோர், ஆசிரியர்கள், மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் அலைபேசி எண் வழியாக மட்டுமே பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை வேடசந்துார் எம்.எல்.ஏ., சாமிநாதன் அறிமுகப்படுத்தி வைத்தார்.
