sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 வாகன ஓட்டிகளை பாடாய்படுத்தும் சர்வீஸ் ரோடு

/

 வாகன ஓட்டிகளை பாடாய்படுத்தும் சர்வீஸ் ரோடு

 வாகன ஓட்டிகளை பாடாய்படுத்தும் சர்வீஸ் ரோடு

 வாகன ஓட்டிகளை பாடாய்படுத்தும் சர்வீஸ் ரோடு


ADDED : பிப் 08, 2026 06:20 AM

Google News

ADDED : பிப் 08, 2026 06:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: சீரமைக்கப்படாத ஒட்டன்சத்திரம் -- தாராபுரம் பைபாஸ் சர்வீஸ் ரோட்டில் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது.

லெக்கையன்கோட்டையில் இருந்து பொள்ளாச்சிக்கு புதிதாக பைபாஸ் ரோடு போடப்பட்டுள்ளது. இந்த ரோட்டில் தாராபுரம் ரோட்டில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. பைபாஸ் ரோட்டில் இருந்து தாராபுரம் ரோட்டிற்கு செல்ல சர்வீஸ் ரோடு உள்ளது. இதேபோல் தாராபுரம் ரோட்டில் இருந்து பைபாஸ் ரோட்டுக்கு செல்வதற்கும் சர்வீஸ் ரோடு உள்ளது.

இருசக்கர வாகனங்கள் முதல் டேங்கர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் பைபாஸ் ரோட்டில் அதிகமாக செல்கின்றன. குறிப்பாக துாத்துக்குடி துறைமுகத்திலிருந்து கோவை, திருப்பூருக்கு அதிக அளவிலான கன்டெய்னர் லாரிகள் செல்கின்றன.

தாராபுரம் ரோட்டில் இருந்து பைபாஸ் ரோட்டில் செல்லம் சர்வீஸ் ரோடு சேதம் அடைந்து பெரிய பள்ளங்களாக காட்சி அளிக்கிறது. பல நாட்களாக சேதம் அடைந்து காணப்படும் இந்த ரோட்டை சீரமைக்காமல் விட்டுள்ளனர். இதனால் தாராபுரம் ரோட்டில் இருந்து பைபாஸ் ரோட்டிற்கு செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றன.

சர்வீஸ் ரோட்டில் அடுத்தடுத்து பெரிய அளவில் பள்ளங்கள் எதிர்கொள்வதால் வாகனங்களை இயக்குவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. சர்வீஸ் ரோட்டை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us