
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி மாத சஷ்டி பூஜை நடந்தது.
இதை முன்னிட்டு முருக பெருமானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தன. மேலும் அருகிலுள்ள காமாட்சி மவுனகுரு சுவாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் சுற்று வட்டாரங்களிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர். நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதியிலும், குட்டூர் உண்ணாமுலை அம்பாள் கோயில் முருகப்பெருமான் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

