ADDED : மார் 24, 2026 05:38 PM
அ நிறம் | அளவு
ரெட்டியார்சத்திரம்:தருமத்துப்பட்டி அருகே காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில் சஷ்டியை முன்னிட்டு வள்ளி தெய்வானை சுப்பிரமணியருக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.
திருவாசக முற்றோதலுடன் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்,தீபாராதனை நடந்தது.
