UPDATED : ஆக 18, 2026 08:18 PM
ADDED : ஆக 18, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
நத்தம்:ஆவணி மாத சஷ்டியை முன்னிட்டு நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அதன்படி பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், ராஜ அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடம், கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
கன்னிவாடி: தருமத்துப்பட்டி அருகே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பால் அபிஷேகம், விசேஷ மலர் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
