ADDED : மார் 16, 2026 06:17 AM
அ நிறம் | அளவு
ஆயக்குடி: பழநி வேப்பன்வலசை சேர்ந்தவர் பழனிசாமி 52. இவர் தனியார் தோட்டத்தில் ஆட்டுப்பட்டி வைத்துள்ளார். நேற்று அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்கள் திடீரென பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறின.
இதில் ஏழு ஆடுகள் இறந்தன. நாய்கள் இழுத்துச் சென்றதில் காயம் அடைந்த மேலும் ஏழு ஆடுகளுக்கு கால்நடைத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.
