/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை
/
கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை
ADDED : பிப் 08, 2026 06:12 AM
கோபால்பட்டி: -கோபால்பட்டியில் நள்ளிரவில் அடுத்தடுத்து 4 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டியை சேர்ந்தவர் சுரேஷ் 36. இவர் கோபால்பட்டி மெயின் ரோட்டில் உள்ள தனியார் காம்ப்ளக்சில் வேளாண் கருவிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
நேற்று காலை போல் கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையின் உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் வைக்கப்பட்டு இருந்த ரூ.30,000 கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. சாணார்பட்டி இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இது போல் அதே பகுதியில் உள்ள எலக்ட்ரிக்கல் கடை, பலசரக்கு கடை உள்ளிட்ட 4 கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்ததும் தெரியவந்தது. கண்காணிப்பு கேமரா பதிவுப்படி போலீசார் தேடி வருகின்றனர்.

