ADDED : செப் 11, 2026 03:51 PM
அ நிறம் | அளவு
கொடைக்கானல், செப்.12
கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வெளியேறும் மதகுகள் புதர் மண்டியுள்ளது.
சுற்றுலா தலமான கொடைக்கானலின் நுழைவாயில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை பயணிகள் ரசிப்பது வழக்கம். கனமழையின் போது இந்த நீர்வீழ்ச்சியில் கழிவுநீர் கலப்பதால் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது.
இந்நிலையில் தண்ணீர் வெளியேறும் 6 கண் மதகுகள் புதர் மண்டியுள்ளதுடன் முகப்பு அலங்கோலமாக உள்ளது. பயணிகள் வீசும் குப்பையால் சுகாதாரக் கேடாக உள்ளது. பூங்கா பராமரிப்பின்றி வெறுமனே காட்சியளிக்கிறது.
நகராட்சி நிர்வாகம் வெள்ளி நீர்வீழ்ச்சியை பராமரிப்பதில் அக்கறை காட்டவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாள்தோறும் ஏராளமான பயணிகள் வரும் நீர்வீழ்ச்சியை பராமரித்து பளிச்சிட செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
