நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பள்ளிகள் அளவிலான ஓபன் சிலம்பபோட்டிகள் சவுந்தரா மன்ற வாளாகத்தில் நடந்தது. ஒற்றைகம்பு, இரட்டைகம்பு, சுருள் போன்ற பிரிவுகளில் வயது, வகுப்பு வாரியாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டது.
முகமது உஸ்மான் தலைமை வகித்தார். தலைமை பயிற்சியாளர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். வாஞ்சிநாதன் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். நடுவர்களாக சிவகுமார், செந்தில், ஹக்கீம், கோபிநாத், பாலாஜி, கணேசன், நித்யா, மோனிகா பங்கேற்றனர். ஏற்பாடுகளை கலைசங்கமம், எஸ்.ஏ.டி., ஸ்போர்ட்ஸ் அகாடமி, தற்காப்பு கலை சங்கமும் இணைந்து செய்தனர்.