
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செந்துறை: செந்துறையில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார்.
துணைச் செயலாளர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விஜயகாந்த் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.
செந்துறை-குரும்பபட்டியில் இருந்து தொடங்கிய மவுன ஊர்வலம் சந்தைப்பேட்டை, பாத்திமா நகர் வழியாக சென்று பஸ்ஸ்டாண்டை அடைந்தது.
ஒன்றிய தலைவர் கண்ணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

