UPDATED : ஆக 31, 2026 11:28 PM
ADDED : ஆக 31, 2026 10:03 PM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணைப்பகுதியில் ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் யானைகள், காட்டுமாடுகள், மான்கள், கேழை ஆடுகள், காட்டுப்பன்றிகள், செந்நாய்கள் அதிகமாக உள்ளன. மலைப்பகுதியில் போதிய மழை இல்லாததால் உணவு, தண்ணீர் தேடி இவை அடிக்கடி விவசாய நிலங்களுக்கு வருகின்றன. தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்தி செல்கின்றன.
இந்நிலையில் பரப்பலாறு அணைப்பகுதியில் உணவு, தண்ணீர் தேடி வந்த ஒற்றை யானை அங்கேயே முகாமிட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். யானையை மீண்டும் அடர் வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
