ADDED : நவ 26, 2025 04:32 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் (எஸ்.ஐ.ஆர்.,) நடக்கிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகளிலும் 2 ஆயிரத்து 124 ஓட்டுச்சாவடி முகவர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி பூர்த்தி செய்து திரும்ப பெற்று வருகின்றனர். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை இணையதளம் மூலமாக தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு பதிவேற்றம் செய்யும் பணி அனைத்து இடங்களிலும் துவங்கி உள்ளது.
இதில் 120 கல்லுாரி மாணவர்கள், தன்னார்வலர்கள். அனைத்து துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
எஸ்.ஐ.ஆருக்கு கால நீட்டிப்பு வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிச.4க்குள் பதிவேற்றம் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
