ADDED : டிச 10, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்,: களப் பணியாளர்கள் பணிச்சுமையை குறைத்து விட வேண்டும்,தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அலுவலர் பதவி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத்திலுள்ள 10 தாசில்தார் அலுவலகங்களிலும் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிய மாவட்டத் தலைவர் வினோத் பாலு தலைமை வகித்தார்.
மாவட்டம் முழுவதும் 120 நில அளவையர்கள் பணியாற்றி வரும் நிலையில் 109 பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
*பழநி தாசில்தார் அலுவலகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு பழநி கோட்டத் தலைவர் தினேஷ்பாரத் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.