/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
40 டன் ரேஷன் அரிசி பதுக்கிய ஆறு பேர் கைது; ஆலைக்கு சீல்
/
40 டன் ரேஷன் அரிசி பதுக்கிய ஆறு பேர் கைது; ஆலைக்கு சீல்
40 டன் ரேஷன் அரிசி பதுக்கிய ஆறு பேர் கைது; ஆலைக்கு சீல்
40 டன் ரேஷன் அரிசி பதுக்கிய ஆறு பேர் கைது; ஆலைக்கு சீல்
ADDED : ஜன 22, 2026 05:49 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே 40 டன் ரேஷன் அரிசி மூடைகளை லாரியுடன் கடத்தி அரிசி அரவை ஆலையில் பதுக்கிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். வருவாய்த் துறையினரால் ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது.
திண்டுக்கல் கொட்டப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். காமாட்சிபுரத்தில் அரிசி அரவை ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த பிரசாத்குமார் 32 ,வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார். பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் அரிசியை கடத்தி காமாட்சிபுரம் அரிசி ஆலையில் பதுக்கி வைத்திருந்த பிரசாத்குமார், ஆலை மேலாளரான கரூர் மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் 26, ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் செங்குடியை சேர்த்த சந்திரசேகர் 53, திண்டுக்கல் சவேரியார் பாளையத்தை சேர்ந்த சின்ராசு 20, அஜய் 27, அய்யலுாரை சேர்ந்த சுப்பிரமணி 58 ,ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். இதன் பின் வருவாய்த் துறையினரால் ஆலைக்கு சீல்' வைக்கப்பட்டது.

