ADDED : ஆக 18, 2026 04:43 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார், ஆக.19
வேடசந்துார் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் வசதியாக்கல் அலுவலகம் மதுரை கிளை சார்பில் பேக்கரி பொருட்கள் உற்பத்தி குறித்த இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடக்க உள்ளது.
ஆக., 18 முதல் செப்., 25 வரை பயிற்சி காலம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள இளைஞர்கள், பெண்கள் வேலைவாய்ப்பு நாடுவோர் விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சி கட்டணம் இலவசம். ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
