ADDED : ஜன 14, 2026 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பட்டி: சித்தையன்கோட்டை பேரூராட்சி சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு போட்டிகள், சேரவெட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார்.
பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் பரமேஸ்வரி வரவேற்றார். பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பேரூராட்சித் தலைவர் போதும்பொண்ணு பரிசு வழங்கினார். ஆசிரியர் ராமு பேசினார்.
சுகாதார ஆய்வாளர் அபுபக்கர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சவுதாமணி பங்கேற்றனர்.

