ADDED : பிப் 13, 2026 06:03 AM
அ நிறம் | அளவு
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை பஸ் ஸ்டாண்ட் எதிரே குடியிருப்புப் பகுதி உள்ளது.
இங்கு நேற்று காலை பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை அப்பகுதி மக்கள் கண்டனர்.
உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, புதருக்குள் மறைந்து இருந்த 4 அடி நீளம் உள்ள கண்ணாடி வீரியன் பாம்பை உயிருடன் பிடித்தனர்.
பின் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.
