தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தண்டவாளத்தில் சரிந்த மண்: ரயில்கள் தாமதம்

 தண்டவாளத்தில் சரிந்த மண்: ரயில்கள் தாமதம்

 தண்டவாளத்தில் சரிந்த மண்: ரயில்கள் தாமதம்


ADDED : மே 09, 2026 02:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2026 02:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சின்னாளபட்டி: திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை அருகே மழையால் தண்டவாளத்தில் மண் சரிந்து விழுந்ததால் 3 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அம்பாத்துறை - கொடை ரோடு இடையே முருகன்பட்டியில் பாறைகளை குடைந்து குகை பகுதியில் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று அதிகாலை பெய்த கன மழையால் இப்பகுதி தண்டவாளத்தில் மண், பாறை கற்கள் சரிந்து விழுந்தன.

ரயில்வே துறையினர் 50-க்கு மேற்பட்ட ஊழியர்களுடன் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாலை 2:50 மணிக்கு வந்த திருநெல்வேலி --சென்னை ரயில் கொடைரோடு ரயில்வே ஸ்டேஷனிலும், 2:30 மணிக்கு வந்த நாகர்கோவில்- -கோவை எக்ஸ்பிரஸ், துாத்துக்குடி-- -மேட்டுப்பாளையம் ரயில்கள் வாடிப்பட்டி ஸ்டேஷனிலும் நிறுத்தப் பட்டன. சீரமைப்பிற்கு பின் 2:30 மணி நேரம் தாமதமாக ரயில்கள் புறப்பட்டு சென்றன. இப்பகுதியில் ஈரப்பதம் அதிகரித்து இருப்பதால் அனைத்து ரயில்களையும் 5 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us