ADDED : மார் 20, 2026 05:12 AM
அ நிறம் | அளவு
வடமதுரை: மக்காச்சோளம் பயிர் அறுவடைக்குப் பின் அதன் கழிவுகளை எரிக்காமல் மண்வளத்தை மேம்படுத்தலாம் என வேளாண்மை அலுவலர் சுப்பையா விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
அவர் கூறுகையில், ''விவசாயிகளில் சிலர் மக்காச்சோளம் அறுவடைக்குப் பின் மீதமுள்ள பயிர் பகுதிகள், தோகைகளை தீயிட்டு எரிக்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு மண்வளம் பாதிப்படைகிறது. மக்காச்சோள அறுவடை முடிந்தவுடன் அதன் கழிவு பகுதிகள் மண்ணில் கலக்குமாறு உழவு செய்ய வேண்டும். மண்ணில் சத்து பெருகி மண்வளம் பாதுகாக்கப்படும். நன்மை செய்யும் நுண்ணுயிர்களும் மண்ணில் அதிகரிக்கிறது. மண்ணில் நீர் பிடிப்பு தன்மையும் அதிகரிப்பதால் அடுத்து பயிர் செய்யும்போது மகசூல் அதிகரிக்கும்'' என்றார்.
