ADDED : செப் 20, 2026 06:42 PM
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேசன் மற்றும் சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் குரூப் சார்பில் சோலார் விழிப்புணர்வு முகாம் ஒட்டன்சத்திரத்தில் நடந்தது.
அசோசியேசன் தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். முதன்மை ஆராய்ச்சியாளர் பரத் ராம், திருமண மஹால் உரிமையாளர் ரகுமான் சேட் முன்னிலை வகித்தனர். ஒட்டன்சத்திரம் சமூக பாதுகாப்பு திட்ட தனித் தாசில்தார் லட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் உஷா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். சோலார் தயாரிப்பு நிறுவனங்களும், வங்கிகளும் கண்காட்சி அமைத்து இருந்தன. சோலார் பற்றிய விழிப்புணர்வும் வங்கி மானியங்கள் குறித்தும் துண்டு அறிக்கைகள் மூலம் விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. ஒட்டன்சத்திரம் நகர ஒருங்கிணைந்த வர்த்தக சங்க தலைவர் சுப்பிரமணியன், டாக்டர் ஆசைத்தம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர். துணைச் செயலாளர் பழனிக்குமார் நன்றி தெரிவித்தார்.
