/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சோலார் விழிப்புணர்வு கருத்தரங்கம்
/
சோலார் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : ஜன 04, 2026 05:35 AM
ஒட்டன்சத்திரம்: சென்னை சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்சன் குரூப் ,திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேஷன் சார்பில் சோலார் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஒட்டன்சத்திரத்தில் நடந்தது. அசோசியேஷன் தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார்.
உதவி மின் பொறியாளர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். மூத்த ஆராய்ச்சியாளர் பரத் ராம், சோலார் பொறியாளர்கள் பொன்ராம், ராமச்சந்திரன், வர்த்தக சங்க செயல் தலைவர் வஞ்சிமுத்து, செயலாளர் தணிகாசலம், பொருளாளர் முகமது மீரான் ,செய்தி தொடர்பாளர் பழனி குமார், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உதவி மேலாளர் சரவணகுமார், இந்தியன் வங்கி முதுநிலை மேலாளர் ராஜேஷ் சர்மா, கனரா வங்கி முதுநிலை மேலாளர் ஸ்ரீமதி பேசினர். அசோசியேஷன் செயலாளர் பாலசுப்பிரமணி நன்றி கூறினார்.

