UPDATED : ஜூலை 18, 2026 02:00 AM
ADDED : ஜூலை 17, 2026 08:01 PM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட அம்மன் கோயில்களில் ஆடி மாத பிறப்பில் வரும் முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், அபிராமியம்மன், பத்ரகாளியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னதாக அபிராமி, பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஏராளமானோர் அம்மன் தரிசனம் பெற்றுச் சென்றனர். பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து கூழை வாங்கி பருகினர்.
ஆஷாட நவராத்திரி விழா
திண்டுக்கல் ஜான்பிள்ளை சந்தில் ஸ்ரீவெற்றி வாராஹி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடி மாத பிறப்பு, ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. கோயிலில் ஜூலை 14ல் ஆஷாட நவராத்திரி விழா சாமி சாற்றுதல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழா துவங்கியது முதல் ராஜ ராஜேஸ்வரி அலங்காரம், மதுரை மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்ட அம்மனை பொது மக்கள், பெண்கள் வழிபட்டுடனர். நேர்த்திக்கடன் எடுத்தவர்கள் கூழ் காய்ச்சி, பக்தர்களுக்கு வழங்கினர். நேற்று வராகி அம்மனுக்கு கருமாரி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, தீபராதானைகள், சிறப்பு பூஜைகள் நடந்தன. கோயில்களை விழாக்குழுவினர் செய்தினர்.
ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
ஒட்டன்சத்திரம், ஜூலை 18-
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், மலர் அலங்காரத்துடன் தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
தங்கச்சி அம்மாபட்டி கரைமாரியம்மன் கோயில், பெயில்நாயக்கன்பட்டி காளியம்மன் கோயில், கே.அத்திக்கோம்பை காளியம்மன் கோயில், விருப்பாச்சி தலையூற்று நாக விசாலாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
ஆடி வெள்ளி கூழ் வழங்கல்
Dateline கன்னிவாடி, ஜூலை 18-
தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு மஞ்சள் நீர், பால் அபிஷேகம் நடந்தது. வாலை திரிபுரை சக்திக்கு விசேஷ மலர் அலங்காரம், சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது.
* சின்னாளபட்டி:
கரியன் குளக்கரை தேவி கருமாரியம்மன் கோயிலில், ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் வழங்கிய கம்பு, கேழ்வரகு, அரிசி ஆகியவற்றை கலந்த கூழ் தயாரிக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன், அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. விசேஷ பூஜைகளுக்கு பின், பக்தர்களுக்கு கூழ் வழங்கல் நடந்தது.
* சமயபுரம் மாரியம்மன் கோயில், ஜீவா நகர் சந்து மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
ஆடி வெள்ளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
பழநி,ஜூலை 18-
பழநி சுற்றுவட்டார பகுதிகளில் அம்மன் கோயில்களில் ஆடிவெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமையும் முன்னிட்டு பெரியநாயகி அம்மன் முத்தங்கி அலங்காரத்தில் எழுந்தருளினார் கிழக்கு ரத வீதி வீதி மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சிவகிரி பட்டி உச்சி காளியம்மன் கோயில், ரயில்வே காலனி முத்துமாரியம்மன் கோயில், புது தாராபுரம் ரோடு ரெணகாளியம்மன் கோயில், கச்சேரி வீதி கூன காளியம்மன் கோயில் அ.கலையமுத்தூர், அக்ரஹாரம் கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயில், நெய்க்காரப்பட்டி மண்டுகாளியம்மன் கோயில், பெரிய கலைய முத்தூர் ஹைகோர்ட் பத்திரகாளி அம்மன் கோயில் ஆகியவற்றில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
