நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி : ஆத்துார் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி பூரண பலன் வேண்டி சின்னாளபட்டியில் சிறப்பு பூஜை நடந்தது.
அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிரத்தியங்கிரா தேவிக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. முன்னதாக நிகும்பலா யாகம் நடத்தப்பட்டது.
ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். ஆத்துார் ஊராட்சி ஒன்றிய தலைவர் மகேஸ்வரி, பேரூராட்சி தலைவர் பிரதீபா பங்கேற்றனர்.

