/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஜூலை 10ல் பேச்சு கட்டுரை போட்டி
/
ஜூலை 10ல் பேச்சு கட்டுரை போட்டி
ADDED : ஜூலை 05, 2025 03:13 AM
திண்டுக்கல்: தமிழ்நாடு நாள் ஜூலை 18 கொண்டாடப்படுவதையொட்டி மாவட்டத்தில் 6-12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டிகள் திண்டுக்கல், எம்.எஸ்.பி., சோலைநாடார் மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 10ம் தேதி காலை 9:30 மணிக்கு நடக்கிறது.
ஆட்சிமொழி வரலாற்றில் கீ.இராமலிங்கம், பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையாரின் தமிழ் ஆட்சிச் சொல் பணி எனும் தலைப்பில் கட்டுரைப்போட்டி ,கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ,அன்னைத் தமிழே ஆட்சிமொழி, தொன்றுதொட்டு தமிழ்நாடு எனும் பெயர், அண்ணாத்துரை கண்ட தமிழ்நாடு, ஆட்சிமொழி விளக்கம், தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய நிகிழ்வு, ஆட்சிமொழி-சங்க காலம் தொட்டு, இக்காலத்தில் ஆட்சிமொழி ஆகிய தலைப்புகளில் பேச்சுப்போட்டிகளும் நடக்கிறது. விரும்பும் மாணவர்கள், அந்தந்த பள்ளி தலைமையாசிரியரிடம் பரிந்துரை பெற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும். விவரங்களுக்கு 0451- 2461585 ல் பேசலாம்.