ADDED : அக் 14, 2025 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: அரசின் ஹிந்து சமய அறநிலை துறை சார்பில் அறுபடைவீடு ஆன்மிக சுற்றுப்பயணம் அக்.13 ல் சேலத்தில் இருந்து 100 , ஈரோட்டில் இருந்து 100 என இரண்டு மண்டலங்களைச் சேர்ந்த 200 பக்தர்கள் அறுபடை வீடு சுவாமி தரிசன பயணத்தை துவங்கினர். பழநியில்
நேற்று பயணத்தை துவக்கிய இவர்கள் அங்கு சுவாமி தரிசனம் செய்தபின் திருச்செந்துாருக்கு சென்றனர். இன்று திருப்பரங்குன்றம் முருகன் கோயில், சோலைமலை முருகன் கோயில் ,அழகர் கோயில்களில் தரிசனம் செய்கின்றனர்.அக்.15 ல் சுவாமி மலையில் தரிசனம் செய்து திருத்தணிக்கு செல்ல உள்ளனர் அங்கு தரிசனம் பின்பு சொந்த ஊருக்கு திரும்ப உள்ளனர்.