/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அபிராமி அம்மன் பக்தர்கள் குழுவின் ஆன்மிக கருத்தரங்கம்
/
அபிராமி அம்மன் பக்தர்கள் குழுவின் ஆன்மிக கருத்தரங்கம்
அபிராமி அம்மன் பக்தர்கள் குழுவின் ஆன்மிக கருத்தரங்கம்
அபிராமி அம்மன் பக்தர்கள் குழுவின் ஆன்மிக கருத்தரங்கம்
ADDED : ஏப் 28, 2025 06:35 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அபிராமி அம்மன் பக்தர்கள் குழு சார்பில் ஆன்மிக கருத்தரங்கம் நடந்தது. இதில் மகாராஷ்டிரா கவர்னர் ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார்.
பக்தர்கள் குழு அறக்கட்டளை துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். மலைக்கோட்டையில் உள்ள அபிராமி அம்மன் கோயிலின் நடக்கும் பூஜைகள், தற்போதைய நிலைமை குறித்த காணொளி திரையிடப்பட்டது. பத்மகிரியும் திண்டிமாநகரமும், திண்டுக்கல் மண்ணின் பெருமை ஆகிய இரு நுால்கள், ஜூன் 22ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு குறித்த துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டது.
பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், சிறுமலை அடிவாரம் தத்வானந்த ஆசிரமம் சுவாமி ஸ்ரீ ஞானசிவானந்தா, அறக்கட்டளை செயலாளர் செந்தில்குமார், ஹிந்து முன்னணி தென் பாரத அமைப்பாளர் பக்தன், அறக்கட்டளை இணைச் செயலாளர் சுகுமாரன், ஹிந்து முன்னணி அமைப்பாளர் ராஜேஷ் பங்கேற்றனர்.

