ADDED : ஆக 24, 2025 03:44 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியில் வருடாந்திர விளையாட்டு விழா நடந்தது. பள்ளி நிறுவனர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். காலை 9:00 மணிக்கு கொடியேற்றத்தை தொடர்ந்து
மாணவர்கள் அணிவகுப்பு, மாஸ் ட்ரில் நிகழ்ச்சிகள் நடந்தன. 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகளில் மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
விமான ஓட்டுநரும் பயிற்றுவிப்பாளருமான காவியா பேசுகையில், ''விளையாட்டு என்பது ஒழுக்கம், ஆரோக்கியம், அணித்துணிவு ஆகியவற்றை வளர்க்கும். கல்வியுடன், விளையாட்டையும் இணைத்து வளர்த்தால் மாணவர்கள் முழுமையான சாதனையாளர்களாக மாறுவார்கள்''என்றார். பள்ளி இயக்குனர் சசிக்குமார், இணை இயக்குனர் கீதாஞ்சலி பரிசு வழங்கினர். பள்ளி முதல்வர் திலகா, ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

