/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அந்தோணியார் சர்ச் திருவிழா துவக்கம்
/
அந்தோணியார் சர்ச் திருவிழா துவக்கம்
ADDED : ஜன 03, 2025 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி; கலிக்கம்பட்டி அந்தோணியார்  சர்ச்  திருவிழா  கொடியேற்றத்துடன்   தொடங்கியது.
இதையொட்டி திருப்பலி நிறைவேற்றி கொடி புனிதப்படுத்தல்,  பலிபீட அர்ச்சிப்பு நடந்தது. திருச்சி திருச்சிலுவை குருமட துணை இயக்குனர் ஜான் கென்னடி தலைமை வகித்தார்.
திருவிழா, சிறப்பு திருப்பலி, கூட்டுப் பிரார்த்தனைகள் நடந்தது. புனிதர்களின் ரத ஊர்வலம், ஜெப வழிபாடும் நடந்தது.
பாதிரியார் பெர்னாட்ஷா, திருப்பலி நிறைவேற்றினார்.   அன்னதானம், வாணவேடிக்கை  நடந்தது. சுற்றுப் பகுதிகளை  சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

