ரூ.4 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கியவர் ஸ்டாலின்;தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார்
ரூ.4 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கியவர் ஸ்டாலின்;தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார்
ADDED : ஏப் 13, 2026 06:34 PM

திண்டுக்கல்:''கொரோனா காலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு மாதத்திற்குள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.4 ஆயிரம் வழங்கியவர் முதல்வர் ஸ்டாலின் ''எனக்கூறி திண்டுக்கல் வேட்பாளர் செந்தில்குமார் ஓட்டு சேகரித்தார்.
திண்டுக்கல் தொகுதி தி.மு.க.,வேட்பாளர் செந்தில்குமார் மாநகராட்சிக்குட்பட்ட ஒய்.எம்.ஆர்.,பட்டி, தலைமை தபால் நிலையம், பஸ் ஸ்டாண்ட், மெங்கில்ஸ் ரோடு, மேற்கு ஆரோக்கிய மாதா தெரு, ஸ்கீம் ரோடு, ஏ.எம்.சி.ரோடு, தெய்வசிகாமணிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து ஓட்டு சேகரித்த அவர் பேசியதாவது:
‛வெளிநாட்டு வங்கிகளில் பெரும் முதலாளிகள், இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் கருப்பு பணத்தை மீட்டு குடிமக்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைப்பேன் என பிரதமர் மோடி கூறினார். 13 ஆண்டுகள் ஆகியும் அவர் சொன்ன வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை.
இதற்காக சந்தன் திட்டத்தின் பொதுமக்களை வங்கிகளில் கணக்கு துவங்கச் சொன்னார்கள். ஆனால் குறைந்தப்பட்ச இருப்புத்தொகை, சேவைக்கட்டணம் என பல்வேறு வழிகளில் நம் வங்கிக்கணக்கில் இருந்து அவர்கள்தான் மாதந்தோறும் பணம் எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
கொரோனா ஊரடங்கின்போது குடும்பத்திற்கு தலா ரூ.7 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கவேண்டும் என அப்போது எதிர்கட்சித்தலைவராக இருந்த ஸ்டாலின் வலியுறுத்தினார்.ஆனால் முதல்வராக இருந்த பழனிச்சாமி அதை காதில் வாங்கவில்லை. தி.மு.க., பொறுப்பேற்றதும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரணத்தொகை வழங்கியவர் முதல்வர் ஸ்டாலின் என்றார்.
