ADDED : அக் 18, 2025 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செந்துறை: -செந்துறை அருகே பிள்ளையார்நத்தத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், தாசில்தார் ஆறுமுகம், ஒன்றிய ஆணையாளர்கள் கிருஷ்ணன், ரவீந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தனர். மகளிர் உரிமை தொகை, மாற்றத் திறனாளிகள் நலத்துறை, சமூகநலத்துறை, வீட்டுவசதி, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட 15 அரசு துறைகளின் சார்பில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது.

