ADDED : ஜன 20, 2026 07:48 AM

அ நிறம் | அளவு
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் யங் ஸ்டார் கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் நடந்த மாநில கூடை பந்தாட்ட போட்டியில் சென்னை அணி முதல் இடம் பெற்றது.
தேனி பகுதிகளில் இருந்து 20 அணிகள் பங்கேற்றதில் சென்னை அணி முதல் இடத்தைப் பிடித்து கோப்பையை வென்றது.
பெரியகுளம் அணி இரண்டாம் இடம், வத்தலக்குண்டு யங்ஸ்டார் கூடை பந்தாட்ட கழக அணி மூன்றாம் இடம் பிடித்தன. தி.மு.க., திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் பரிசுகளை வழங்கினார்.
ஒன்றிய செயலாளர் முருகன், கனிக்குமார், நகர செயலாளர் சின்னதுரை, தொழிலதிபர்கள் கணபதிசிங்காரம், சந்தோஷ், செல்வம் பங்கேற்றனர். கூடைப்பந்து கழக செயலாளர் போஸ் நன்றி கூறினார்.
