/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டி.என்.டி., என ஒற்றை சான்று வழங்க வேண்டும் மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசன் பேச்சு
/
டி.என்.டி., என ஒற்றை சான்று வழங்க வேண்டும் மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசன் பேச்சு
டி.என்.டி., என ஒற்றை சான்று வழங்க வேண்டும் மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசன் பேச்சு
டி.என்.டி., என ஒற்றை சான்று வழங்க வேண்டும் மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசன் பேச்சு
ADDED : நவ 03, 2025 04:04 AM
நிலக்கோட்டை: தமிழக அரசு டி.என்.டி. மக்களுக்கு தேவையான சலுகைகளையும் உரிமைகளையும் வழங்க மறுத்து வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் உடனடியாக ஒற்றைச் சாதி சான்று வழங்க வேண்டும் என பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசன் பேசினார்.
நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் மகளிர் அணி கூட்டமைப்பு சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றிய கருத்தரங்கம் நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு ராஜாராம் தலைமையில் நடந்தது.
இதில், பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசன் பேசிய தாவது:-
இன்றைக்கு பிரமலைக்கள்ளர் சமூகம் கல்வியில் வளர்ச்சி பெற முடியாததற்கு அரசு ஒரு காரணமாக திகழ்கிறது. தமிழக அரசு டி.என்.டி. சான்று வழங்குவதற்கு இத்தனை ஆண்டு காலம் இழுத்தடிக்க வேண்டிய அவசியம் என்ன.
இப்பிரிவில் உள்ள 68 சமூகத்திற்கு டி. என். டி., டி. என். சி. என்று இரண்டு சான்றுகளை வழங்கினால் சரியா.
2016ல் பிரதமர் டி. என். டி., காக ஒரு கமிஷன் அமைத்தார். அந்த கமிஷன் அறிக்கையை நடைமுறையில் கொண்டுவர பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல டி. என். டி. சமூகத்தில் உள்ள மாணவர்களுக்கும், பெண்களுக்கும் கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை உருவாக்கி செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் தமிழக அரசு டி.என்.டி. மக்களுக்கு தேவையான சலுகைகளையும் உரிமைகளையும் வழங்க மறுத்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் உடனடியாக ஒற்றைச் சாதி சான்று வழங்க வேண்டும். எம். பி. சி. இட ஒதுக்கீட்டில் தனி இட ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றார்.

